யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், பெண்ணின் 16 வயதான மகன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி தானே தாயின் கழுத்தை காலால் மிதித்து கொலை செய்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 37 வயதான குறித்தப் பெண் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அத்துடன், தாயுடன் தங்கியிருந்த 16 வயதான மகனும் காணாமல் போயிருந்தார்.
குறித்தப் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காணாமல் போன சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தாயின் கழுத்தை நெரித்து கொலைசெய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சிறுவன் “சிறுவர் நன்நடத்தை” நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது .
Post a Comment