நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயம்

 






மஹவெவ, கொஸ்வாடிய பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று  பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், காரில் இருந்த மூவர் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் கொஸ்வாடிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பாரிய மரம் ஒன்று கார் மீது விழுந்துள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஏழு வயது மகள் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

அப்பகுதியில் வசிப்பவர்களின் கடும் முயற்சியால் காரில் சிக்கிய அனைவரையும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial