இளையராஜா என்றுமே இசையில் கடவுள் தான். இது அனிருத், யுவன் காலம் என்றெல்லாம் பேச்சுக்கள் வந்தாலும் தன்னை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறார் இளையராஜா. சமீபத்தில் கூட இவர் பாடிய பாடல்கள் கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகி உள்ளது.
தன்னுடைய பாடல்களை மற்ற படங்களில் பயன்படுத்தக் கூடாது என இளையராஜா சொல்லியதில் இருந்து எல்லா பக்கமும் தற்போது அவருக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. சமீபத்தில் கூட லோகேஷ் கனகராஜ் தன் பாடலை பயன்படுத்தியதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இளையராஜா இனிமேல் அவ்வளவுதான் என்று சொல்லும் போதே வெற்றிமாறனின் விடுதலை படத்தில் கொடுத்தார் ஒரு நச் ஹிட் பாடல் . “வழி நெடுவ காட்டுமல்லி” பாடல் மொத்த ரசிகர்களையும் சுண்டி இழுத்தது. விடுதலை படத்தில் போட்ட இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட். இளையராஜா என்றுமே நான்தான் ராஜா என்று மீண்டும் நிரூபித்தார்.
இப்பொழுது விடுதலை செகண்ட் பார்டில் நான் மேலே பறக்கும் ராஜாளி கீழே இறங்கி வருவது மிகவும் கடினம் என்பது போல் தன்னை நிரூபித்துள்ளார் இளையராஜா. இந்த படத்தில் நான்கு பாடல்கள் போட்டுள்ளாராம் நான்குமே அவ்வளவு சூப்பராக வந்திருக்கிறதாம். நான், நீ என அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு ஆடியோ ரைட்ஸ் வாங்க குவிந்துள்ளனர்.
கடைசியாக இவர் போட்ட அந்த நான்கு பாடல்களையும் நான்கு கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது ஜீ ஸ்டுடியோஸ். விடுதலை செகண்ட் பார்ட் எடுத்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறனை தோழர் என்று தான் அழைக்கிறாராம். வெற்றி மாறனும் இளையராஜாவை தோழர் என்று கூப்பிடுகிறார்.
Post a Comment