இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தோனேசியா பயணமானார்.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொள்கிறார்.
'கூட்டு செழுமைக்கான நீர்' என்ற தொனிப்பொருளில் 10 ஆவது உலக நீர் மாநாடு மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி மாநாட்டில் விசேட உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment