இலங்கைக்கு வருகைத் தந்துள்ள வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை

 






மே மாதம் முதலாம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 881,541 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அத்தோடு, மே மாதத்தின் முதல் 26 நாட்களில் 28.1 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்தியாவில் இருந்து 27,274 சுற்றுலாப் பயணிகளும் மாலைத்தீவில் இருந்து 7,620 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர்.

மேலும், ஜேர்மனியில் இருந்து 6,938 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 6,935 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial