துணியினால் கழுத்து நெரிக்கப்பட்டு மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உடுத்துறை வடக்கு, தாளையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் அதே இடத்தை சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் என தெரியவந்துள்ளது.
வீட்டில் உள்ள கழிவறைக்கு அருகாமையில் உள்ள நீர் நிரம்பிய கொள்கலன்(பரல்) உள்ளே தலைப் பகுதி நீரில் இருக்குமாறு குப்புற விழுந்த நிலையில் அதிகாலை 5.30 மணி அளவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி கனகசபை வாசுதேவா பிரேத பரிசோதனையை மேற்கொண்டார்.
இதன்போது கழுத்து துணியால் சுற்றி நெரிக்கப்பட்டு சூட்சுமமான முறையில் கொலை செய்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.
Post a Comment