யாழில் மீன்பிடிப்பதற்கு சென்ற தொழிலாளி ஒருவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோனிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றவேளை, கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
Post a Comment