இலங்கை (Sri Lanka), இந்திய (India) கடற்றொழிலாளர்கள் 17 பேர் 6 படகுகளுடன் இருநாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .
5 படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்ற வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த 14 இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்தியாவின் காரைக்கால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காரைக்காலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை தமிழகம் - தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிப்பட்டின கடற்றொழிலாளர்கள் மூவர் பயணித்த படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மாதகல் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
Post a Comment