குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ...

 





குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர்  தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, வடமராட்சி துன்னாலை பகுதியை அவர்கள் விலாசமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரசவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று  காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial