அக்கரபத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தினை இன்று பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொதுமக்கள் நேற்று வழங்கிய தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த ஆண் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண முடியாதவாறு அழுகிய நிலையில் காணப்பட்டதாகவும் உயிரிழந்த நபர் தொடர்பாக தகவல்கள் எதுவும் பொலிஸாருக்குக் கிடைக்கவில்லை என்று தெரிவித்த பொலிஸார் உயிரிழந்தவரை இனங்காணுவதற்கு பொதுமக்களிடம் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
Post a Comment