கற்பிட்டி, கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
பாத்திமா சைமா எனும் பெண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு பிரதேச மக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த கற்பிட்டி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
வறுமையினால் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் அடிக்கடி ஏற்பட்டுவந்த தகராறு காரணமாக தாய் தனது குழந்தையை இவ்வாறு கிணற்றில் வீசியுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment