ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் 14.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தனியார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதத்தில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட தனியார் வாகனங்களின் பெறுமதி 4.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு மேலதிகமாக, ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில் 102.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான காய்கறிகள் (மைசூர் பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் மற்றும் பிற காய்கறிகள்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
Post a Comment