நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12,224 குடும்பங்களை சேர்ந்த 45,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நுவரெலியா, புத்தளம் , இரத்தினபுரி ,கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கனமழை, மின்னல்,திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.
குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் 6,212 குடும்பங்களை சேர்ந்த 25,126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு முற்றாக சேதமடைந்துள்ளது. அத்துடன் 491 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 4 குடும்பங்கள் உட்பட 20 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
Post a Comment