ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு நடிகர் ஷாருக்கான் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஷாருக்கான் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
கொல்கத்தா, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய குவாலிஃபயர் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்தப் போட்டியைக் காண ஷாருக்கான் அகமதாபாத் சென்றிருந்தார்.
அப்போது நடிகர் ஷாருகான், அகமதாபாத்தில் நிலவும் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நீரிழப்பு நோயால் அவதிப்பட்டார்.
இதனால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஷாருக்கின் மனைவி கௌரி கான் மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். மேலும் ரசிகர்கள் ஷாருக்கானை பார்ப்பதற்காக மருத்துவமனையைச் சுற்றி கூடியதால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Post a Comment