பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம்

 






குஜராதில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளான 4 இலங்கையர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு பேரைகைதுசெய்துள்ளது ,எனினும் ஒஸ்மண்ட் ஜெராட் என்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஜெராட் தேடப்படுகின்றார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அவரை கைதுசெய்யபவர்களிற்கு சன்மானத்தை அறிவித்துள்ளது.

மே 20 திகதி குஜராத்தின் அஹமதாபாத் விமானிநிலையத்தில் ஐஎஸ் சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வரை கைதுசெய்ததன் மூலம் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பாரிய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர்.

மாநிலத்திற்கு வெளியே இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதில் குஜராத் பயங்கரவாத தடுப்புபிரிவின் மூன்று குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் விசாரணைகளின் மூலம் ஒஸ்மன்ட் ஜெராட் என்ற நபர் நான்கு சந்தேகநபர்களிற்கும் நான்கு இலட்சம் ரூபாய்களை வழங்கியமையும், இந்த நபர் அடிக்கடி தனது தோற்றத்தை மாற்றுவதும் தெரியவந்துள்ளது.

இலங்கை அதிகாரிகள் இரண்டு சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர் ஒஸ்மன்ட் ஜெராட் தலைமறைவாகியுள்ளார் என குஜராத்தின் பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் போது இந்தியாவில் சந்தேகநபர்களின் நடவடிக்கைகளிற்கு மேலும் மூவர் உதவியமை தெரியவந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial