தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய், கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது அரசியலிலும் என்ட்ரி கொடுத்து இருக்கும் இவர், கைவசம் உள்ள படத்தை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
தற்போது இவர் அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
அவ்வப்போது அரசியல் கருத்தை இசை வெளியீட்டு விழாவில் பேசி வந்த விஜய், தனது ரசிகர் மன்றத்தை 2009ஆம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றினார்.
அந்த வகையில், அடிக்கடி இயக்க நிர்வாகிகளைச் சந்தித்து வந்த விஜய், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
அரசியல் கட்சி: இதையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவுமில்லை என்றும், 2026ஆம் ஆண்டு தேர்தலே தனது இலக்கு என்றார். தீவிர அரசியலுக்கு பின் சினிமாவில் இருந்து விலகுவேன் என அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
Post a Comment