முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றையதினம் காலை முல்லைத்தீவில் இடம்பெற்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அங்கு நின்ற மக்களின் உயிர்காத்த உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காணப்பட்ட நிலையில்,
இன்றைய தலைமுறையினருக்கு முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை கடத்தும் விதமாக, விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்த பகுதியில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
Post a Comment