பிரசவித்த குழந்தையை கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவி பொலிஸாரிடம் சிக்கினார்

 






யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவித்த குழந்தையை கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை  பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.


சம்பவம் தொடர்பில் யாழ் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். 


நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த மாணவியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.


விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial