தமிழ் சினிமாவில் சமீபகாலமாக அதிர்ச்சி கொடுத்து வரும் செய்தி என்னவென்றால் ஜிவி பிரகாஷ் - சைந்தவியின் பிரிவு. மிகப்பெரியளவில் பேசப்பட்டு வரும் இவர்களின் பிரிவு செய்தி பற்றி பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
தேவையில்லாத கருத்துக்களை கூறுபவர்களை கண்டித்து கூட ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிக்கையை வெளியிட்டனர். இதுதொடர்பாக இணையத்தில் சைந்தவியின் பழைய பேட்டி வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பத்திரிக்கையாளர், சினிமா விமர்சகர்கள் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வரும் நிலையில் சினிமா விமர்சகர் அந்தணன் புதிய தகவல் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், ஜிவி பிரகாஷின் தாய் மாமனாக ஏ ஆர் ரகுமான் இருந்தாலும் நீண்டகாலமாக இருவருக்கும் நெருங்கிய தொடர்பு இல்லை, பேச்சு வார்த்தையும் இல்லை. தொழில் சார்ந்தபடியான விஷயத்தை பற்றி பேசுவாரே தவிர, இந்த பிரச்சனை குறித்து பேசும் அளவிற்கு ஏ ஆர் ரகுமான் நெருக்கமாக இல்லை.
ஆனால் ஜிவி பிரகாஷின் அப்பா மீது மரியாதை எல்லா இடங்களிலும் இருக்கிறது. அவர் மகனுக்கு அறிவுரை கூறாமல் விட்டுவிட்டாரா என்று பலர் கேட்கிறார்கள்.
ஒருவேளை, மருமகளுடன் ஜிவி பிரகாஷ் அப்பா பேசி, ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் சரி செய்யலாம் என்று கூறலாம். இதுவே இறுதியான முடிவு கிடையாது.
பரஸ்பரமாக பிரிகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக சொன்னால் கூட அது மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. இந்த பக்கம் விசாரிக்கும், ஜிவி பிரகாஷுக்கு வேறொருவருடன் தொடர்பு இருக்கிறது, அதனால் தான் இந்த முடிவை எடுத்தார் என்கிறது தவறு. அதேபோல் ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்துக்கு தனுஷ் காரணம் என்று கூறுவதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயமான விஷயம்.
தனுஷை இந்த விவகாரத்தில் கொண்டு வருவது தவறு, சைந்தவியை தரைக்குறைவாக பேசுவது கேட்கவே சகிக்கவில்லை. சைந்தவியும் வேறொரு தொடர்பு இருக்கிறது என்று விசாரித்ததில் எதுவும் தெரியவில்லை. அதனால் ரொம்ப சீக்கிரமாக இருவரும் இணைய வாய்ப்பு இறுப்பதாக தான் நான் பார்க்கிறேன் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.
Post a Comment