தற்போது பெய்து வரும் மழையால் காய்கறி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தேவைக்கு ஏற்ற வகையில் அறுவடை இல்லாததால், காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சில்லரை விற்பனையில் ஒரு கிலோ கிராம் போஞ்சி ரூ.480, முருங்கை காய் ரூ.720, கேரட் ரூ.240, மிளகாய் ரூ.440, பீட்ரூட் ரூ.400, தக்காளி ரூ.240, பச்சை மிளகாய் ரூ.400, புடலங்காய் ரூ.320, பூசணி ரூ.160, கத்தரிக்காய் ரூ.240, முட்டைகோஸ் ரூ.240, வெண்டைக்காய் ரூ.400, மரவள்ளி கிழங்கு ரூ.200 என விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகளின் விலை உயர்வால் நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
Post a Comment