ஒரு காலத்தில் தகவல் தொடர்பு,செல்போன் என கொடி கட்டிபறந்த லைக்கா நிறுவனம் இப்பொழுது பெரும் பண நெருக்கடியில் இருக்கிறது.
பெரிய ஹீரோக்கள் எல்லாரும் நம்பி இருக்கும் ஒரே தயாரிப்பு நிறுவனம் லைக்கா.
எவ்வளவு பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் அசால்ட்டாக சமாளிப்பார்கள்.
சங்கரின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி, ரஜினிகாந்தின் வேட்டையன் என அடுக்கடுக்காக பெரிய பட்ஜெட் படங்களை கையில் எடுத்தனர்.
இப்பொழுது எந்த பக்கம் செல்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. லைக்கா ஓனர் சுபாஸ்கரன் அகலக்கால் வைத்ததால் இப்பொழுது இந்த மூன்று படங்களுமே கடும் நெருக்கடியில் இருக்கிறது.
இதையெல்லாம் கவனித்த ரஜினிகாந்த் லைக்கா சுபாஷ்கரனை அழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார்.
நான் என் கேரியரில் எவ்வளவோ படம் நடித்துள்ளேன் இந்த படம் மாதிரி ஒரு சங்கடத்தை சந்தித்ததில்லை என லைக்கா நிறுவனத்தை காட்டமாக பேசிவிட்டாராம் சூப்பர் ஸ்டார்.
Post a Comment