2026 தேர்தலை குறிவைத்து கட்சியை ஆரம்பித்துள்ளார். தற்போது கோட் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் அவர் அடுத்த வருட தொடக்கத்திலிருந்து முழு நேர அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள இருக்கிறார்.
அது மட்டுமின்றி விரைவில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடும் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையும் தீவிரமாகி உள்ளது.
2 கோடி என்ற இலக்கை வைத்துள்ள இக்கட்சியில் தற்போது முக்கிய பிரமுகர் ஒருவர் இணைந்துள்ளார். அது மட்டும் இன்றி தன்னைச் சேர்ந்த 500 பேரையும் அவர் கட்சியில் இணைத்துள்ளார்.
அந்த வகையில் நாகை மாவட்டம் அக்கரை பேட்டை, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு மீனவர் நல வாரிய மாநில குழு உறுப்பினரும், நாகை மாவட்ட மீனவர் நல அமைப்பாளருமான எஸ் கே ஜி சேகர் தலைமையில் TVKல் இணைந்துள்ளனர்.
இவர்களை தங்கள் கட்சிக்கு வரவேற்ற நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் மாலை மரியாதை செய்து உறுப்பினர்களாக இணைத்து கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழக மகளிர் அணியினர், வழக்கறிஞர், நகரச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment