தேசிய பாதுகாப்பு தொடர்பில் மூலோபாயமாக கருதப்படும் பல துறைகளுக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 18 பில்லியன் டொலர் வரியை அதிகரிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சீனாவின் தொழிநுட்ப வளர்ச்சிக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கிலும், அமெரிக்க தயாரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம், எலக்ட்ரிக் வாகனங்கள், சோலார் செல்கள், கிரேன்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி உயர்வு பொருந்தும் என்று கூறப்படுகிறது.
Post a Comment