சுற்றுலா பயணிகளுக்கு தேயிலையை நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு

 







இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வருகை முடிந்து திரும்பும் போது விமான நிலையத்தில் இலங்கை தேயிலையை நினைவுப் பரிசாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர முன்மொழிந்துள்ளார்.

அதன்படி, சிலோன் டீயின் பெயரை உலகில் பிரபலப்படுத்தும் நோக்கில், இலங்கைக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிகளுக்கும் இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.

தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த யோசனையை முன்வைத்தார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial