கடந்த 13ம் திகதி இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது தீவிரமடைந்துள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 20ம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக 18,19 ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
இந்த நிகழ்வின் பின்னர் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment