ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரை கொலை செய்து வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் இன்று அதிகாலை குருநாகல்- நல்லையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொலையினை 42 வயதுடைய ஒருவரே மேற்கொண்டுள்ளதுடன் பொலிஸாரின் விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment