நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 6 மரணங்கள் மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சீரற்ற காலநிலையால் இதுவரை 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 19 மாவட்டங்களில் 12,197 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Post a Comment