யாழில் தெல்லிப்பழை பகுதியியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை ஊடகவியலாளர் ஒருவர் குறித்த கடையில் மாட்டு இறைச்சி கொத்தினை வாங்கி உண்ட வேளை குறித்த உணவில் நாய் இறைச்சி என சந்தேகிக்கும் வகையில் தோற்றமளிக்கும் அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டொன்று தென்பட்டுள்ளது.
அதனை அடுத்து குறித்த பகுதியிலுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவருடன் கடையினுள் இருந்தவாறு குறித்த ஊடகவியலாளர் தொடர்பு கொண்டார். இருப்பினும் அன்றையதினம் குறித்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதரால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை
Post a Comment