சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் விஜய் பட வில்லன்

 





சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே 23 ஆகிய இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் அமரன். சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பியது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இருக்கும் சமயத்தில் ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பையும் ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இந்த இரு திரைப்படங்களும் இதுவரை நாம் பார்த்த சிவகார்த்திகேயனின் படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர் வித்யூத் ஜம்வால் தான் கமிட்டாகி இருக்கிறார் என பேசப்பட்டு வருகிறது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial