கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் 40 பேர் உயிரிழப்பு!

 




கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


இதன் காரணமாக தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மிதக்கிறது. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒன்றரை லட்சம் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியாகியுள்ளனர்

இதனிடையே, கென்யாவில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் அணை வெள்ளத்தில் சேதம் அடைந்தது. தடுப்புச்சுவர் உடைந்ததில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் நீர் புகுந்தது. இதனால், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 40 பேர் வரை உயிரிழந்ததுடன் பலர் இன்னும் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial