நாளை வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

 








தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு நாளையதினம் கல்முனை பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களின் வியாபாரா நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் எதிர்வரும் மே 01ம் திகதி 2024ல் எமது பொதுச் சந்தையிலுள்ள வர்த்தக நிலையங்களை முற்று முழுவதுமாக எதுவித வியாபார நடவடிக்கைகளுமின்றி மூடுவதாகவும்  இத் தொழிலாளர்களுக்காக சுதந்திரத்தை வழங்குவதற்காகவும் அத்தினத்தில் எதுவித வியாபார நடவடிக்கைகளும் நடைபெறமாட்டாது என்பதனையும் வர்த்தகர்களுக்கும்  நுகர்வோர்களுக்கும் அறிவிப்பதாக கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 2024.05.01 திகதி இந்நாளில் உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்கான விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் இதுவரை காலமாக எமது பொதுச் சந்தையின் ஊழியர்களுக்கான விடுமுறை வழங்கப்படாமை மிகவும் கவலையளிப்பதாக எமது பல நூற்றுக்கணக்கான ஊழியர்கள் எமது வர்த்தக சங்கத்திடம் பல முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial