வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் இருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் .
வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மன்சூர் அலிகான் தீவிர பிரசாரம் செய்தார். இந்நிலையில் திடீரென்று உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் குடியாத்தம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவான ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, உடல்நிலை சரியில்லாத போதும், டாக்டர்கள் ஆலோசனைகளையும் மீறி, தான் போட்டியிடும் வேலூர் தொகுதி மக்களை பார்க்க, மருத்துவமனையில் இருந்து மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
நாளை அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து வேலூர் செல்ல உள்ளதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
Post a Comment