அவுஸ்திரேலிய நேரப்படி மாலை மூன்றுமணியளவில் வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றது – அங்கு காணப்பட்ட மக்கள் உடனடியாக தப்பியோட தொடங்கினார்கள்.
உணவுவிடுதியொன்றில் தனது இரண்டு பிள்ளைகளுடன் நின்றிருந்த ஒருவர், நபர் ஒருவர் கண்மூடித்தனமாக கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபடுவதை பார்த்தேன் என தெரிவித்துள்ளார்.
அது படுகொலை என தனது பெயரை குறிப்பிடவிரும்பாத ஒருவர் ஏபிசிக்கு தெரிவித்துள்ளார்.
மூன்று பத்திற்கு வணிகவளாகத்திற்குள் நுழைந்த நபர் அங்கிருந்து வெளியேறிய பின்னர் சில நிமிடங்களில் திரும்பிவந்து தாக்குதலில் ஈடுபட்டார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்த தாக்குதலிற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகத அதேவேளை பயங்கரவாத நோக்கத்தினை நிராகரிக்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment