நடிகர் சங்க கட்டிடம் எப்போது முழுமையாக நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட் மத்தியில் நிலவி வருகிறது. விஜயகாந்த் காலம் தொடங்கி பல வருடமாக இந்த கட்டிடம் கட்ட போராட்டம் நடந்த வருகிறது. இப்போது விஷால், நாசர் மற்றும் கார்த்தி இதற்கான பணியில் இறங்கி இருக்கின்றனர்.
சில காரணங்களால் இந்த பணி முடக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது தீவிரமாக மீண்டும் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய், கமல் போன்ற பிரபலங்கள் தலா ஒரு கோடி ரூபாய் இந்த கட்டிடத்திற்காக கொடுத்திருந்தனர்.
அதேபோல் நடிகரும் அரசியல்வாதியும் ஆன உதயநிதியும் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் 50 லட்சம் தொகை கொடுத்திருந்தார்.
இப்போது நடிகரும் மற்றும் அரசியல்வாதியுமான நெப்போலியன் ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். இவர் ஏற்கனவே 2000 முதல் 2006 காலகட்டத்தில் நடிகர் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பில் இருந்துள்ளார்.
Post a Comment