மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனமானது ஆன்லைன் (Online) அம்சத்தை வைத்து "ஆட்டம் காட்டும்" பயனர்களுக்கு பகீர் கிளப்பும்படியான ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் (Status updates) பிரிவில் பிரைவேட்லி டேக் காண்டாக்ஸ் (Privately tag contacts) என்கிற அம்சம், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போட்டோக்களை எடிட்டிங் செய்யும் அம்சம் உட்பட.. கடந்த சில வாரங்களில், ஏற்கனவே பல புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பிற்கு வந்துவிட்டன.
அதனொரு பகுதியாக.. உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்டில் யாரெல்லாம் சமீபத்தில் ஆன்லைனுக்கு வந்து சென்றனர் (Contacts Were Online Recently) என்கிற பட்டியலை வெளிப்படுத்தும் புதிய அம்சமும் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது வாட்ஸ்அப் பிளாட்ஃபார்மில் மிகவும் சமீபத்தில் யார் எல்லாம் ஆக்டிவ் ஆக இருந்தார்கள் என்பதை நீங்கள் சரிபார்க்க விரும்பினால் இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும்.
இதன்மூலம் யாருக்கு முதலில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பதையும் எளிமையாக தீர்மானிக்க முடியும்.
மேலும் இந்த புதிய அம்சம், ஒவ்வொரு காண்டாக்ட்டிற்கும் சென்று அவர்கள் கடைசியாக எப்போது ஆன்லைனிற்கு வந்தார்கள் என்பதை தனித்தனியாக சரிபார்க்க வேண்டிய தேவையையும் நீக்குகிறது.
ஆன்லைன் அம்சத்தை மறைத்து வைத்து இருக்கும் பயனர்களிடம் இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை. இந்த அம்சம் அனைவருக்கும் அறிமுகமான பின்னர் அதுகுறித்த தகவல் கிடைக்கலாம்.
தற்போதைய நிலவரப்படி, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவின் (WhatsApp Android Beta) லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Tester) மட்டுமே இந்த புதிய அம்சம் அணுக கிடைக்கிறது. இது வரும் வாரங்களில் இன்னும் அதிகமான பயனர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பிரைவேட்லி டேக் காண்டாக்ஸ் என்கிற அம்சத்தை பொறுத்தவரை.. பெயர் குறிப்பிடுவது போலவே, இதுஸ்டேட்டஸ் அப்டேட்டில் தங்கள் காண்டாக்ட்ஸ்-ன் கீழ் உள்ள நபர்களை தனிப்பட்ட முறையில் டேக் செய்ய உதவும் ஒரு அம்சமாகும்.
இதுவும் கூட தற்போது வரையிலாக இது பீட்டா டெஸ்டிங்கிற்கான ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே அணுக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .
Post a Comment