வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவந்த மன்சூர் அலிகான் இன்று குடியாத்தம் பகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment