மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்களை பேரணிகளுக்காக அழைத்து வரும் ஒழுக்கமற்ற பஸ் சாரதிகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் வீதியில் பயணிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Post a Comment