பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது.
அதாவது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் காஸாவில் ஒரு குழந்தை போரால் உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று ஐநா கூறியுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின.
இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
Post a Comment