சினிமாவை பொருத்தவரைக்கும் ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆச்சுன்னா, அதை அப்படியே ஃபாலோ பண்ணி பத்து படம் வெளியாகி விடும். பேய் படம் ஹிட்டான அடுத்த பத்து படம் பேய் படம் தான் இருக்கும். காமெடி படம் ஹிட்டான தொடர்ந்து காமெடி படங்களா வெளியாகும்.
அதே மாதிரி கடந்த சில வருடங்கள் வரை சினிமாவை ரொம்பவும் ஆட்கொண்டு இருந்த விஷயம்னு சொல்லணும்னா பயோபிக் படங்கள். அதேபோன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் ட்ரெண்டாகி இருக்கிறது.
அதுதான் பெரிய ஹீரோக்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பது. விக்ரம் படத்தில் ஏற்கனவே கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என மூன்று பெரிய ஹீரோக்கள் இருந்தார்கள். அதைத் தாண்டி நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் என்னும் கேமியோ ரோல் கொடுக்கப்பட்டது.
இந்த ஐடியா பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் எங்க பார்த்தாலும் கேமரால்களாக தான் இருந்தார்கள். இப்போ சிவகார்த்திகேயனும் இந்த டிரெண்டை செய்ய இருக்கிறார்.
Post a Comment