தென்னிந்திய சிதொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து விமானப்படையினரின் எண்ணிக்கையை 35,000 இலிருந்து 18,000 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விமானப்படை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படையினரின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
கடந்த காலத்தில், ஒரு சிப்பாய் ஒரு குறிப்பிட்ட வரம்பை எதிர்நோக்குகிறார். ஆனால் ஒரே நேரத்தில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை நாம் ட்ரோனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நாங்கள் மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எங்கள் படைகளின் அளவைக் குறைக்கப் பார்க்கிறோம். மேலும் நாங்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறோம்.
Post a Comment