கமல் - மணி ரத்னம் இடையே பிரச்சனையா

கமல் - மணி ரத்னம் இடையே பிரச்சனையா! உண்மை இதுதான் | Kamal Haasan Mani Ratnam Fight Controversy

 

உலகநாயகன்  - இயக்குனர் மணி ரத்னம் இருவரும் இணைந்து முதல் திரைப்படம் நாயகன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 37 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த கூட்டணி தக் லைஃப் படத்திற்காக இணைந்துள்ளது.


ஆம், மணி ரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். திரிஷா, சிம்பு போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பிற்கு மூன்று நாட்கள் கமல் ஹாசன் வரவில்லையாம். இயக்குனர் மணி ரத்னத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தான், படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்ளவில்லை என கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

ஆனால் அது உண்மையில்லை, தக் லைஃப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு கமல் ஹாசன் வரிகள் எழுதி பாடுகிறார். அதற்கான ஏற்பாடுகளை தான் தற்போது செய்து வருகிறாராம். அதனால் தான் கமல் ஹாசனால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவரம் தெரியாமல் சிலர் மணி ரத்னம் - கமல் ஹாசன் இருவருக்கும் இடையே மோதல், அதனால் தான் கமல் ஹாசன் படப்பிடிப்பிற்கு வரவில்லை என வதந்திகளை கிளப்பிவிட்டனர். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது






Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial