பூமியை குளிர்விக்க புதிய திட்டம்

 







சூரிய ஒளியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி பூமியை குளிர்விக்க சோதனை நடத்த புதிய வழி ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் முன்மொழிந்து உள்ளனர்.

மேலும் பாரீஸ் பருவநிலை உச்சி மாநாட்டில் இந்த திட்டம் வகுக்கப்பட்டது. இருப்பினும் , இந்த திட்டத்தை முழுமையாக பின்பற்ற முடியாமல் உலகநாடுகள் தடுமாறி வருகின்றன.

குறிப்பாக கடந்த 2023 ஆண்டு தான் பூமி அதன் வெப்பமான ஆண்டை பதிவு செய்தது. வரும் காலங்களில் பூமியில் பதிவாகும் வெப்பம் மேலும் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.

இதனால் பூமியின் வெப்பத்தைக் குறைக்க ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளில் இறங்கி உள்ளனர். 

அதாவது சூரியனில் இருந்து வரும் சில கதிர்களை மீண்டும் விண்வெளிக்குத் திருப்பி அனுப்புவதே இந்தத் திட்டமாகும்.

இதற்காக அவர்கள் கிளவுட் ப்ரைட்டனிங் என்ற முறையைப் பயன்படுத்துகிறார்களாம்.

இது மேகங்களைப் பிரகாசமாக்கும் ஒரு முக்கிய தொழில் நுட்பமாகும் இந்த மேகங்கள் சூரிய ஒளியின் ஒரு சிறிய பகுதியை மீண்டும் விண்வெளிக்கே திரும்பி அனுப்பிவிடுமாம்.

இதன் காரணமாகப் பூமியின் ஒரு பகுதி வெப்பம் கணிசமாகக் குறையும். இந்த தொழில்நுட்பம் முழுமையாக வெற்றி அடைந்தால் அது மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial