சிங்கள தமிழ் புத்தாண்டு காலத்திற்கான விசேட பேரூந்து சேவை இன்று முதல் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலங்களில் கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் கிராமங்களுக்குச் செல்வதற்காக இந்தப் பேரூந்துச் சேவை நடத்தப்படும் என்றும், அதற்காக சுமார் 200 மேலதிக பேருந்துகள் பயன்படுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பில் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் இந்த பேரூந்து சேவை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு நடத்தப்படும் விசேட ரயில் சேவையும் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த சேவையின் கீழ் நாளாந்தம் சுமார் 12 விசேட ரயில் பயணங்களை ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 15ம் திகதி வரை இயக்கப்பட உள்ளது.
Post a Comment