குறித்த பிரேரணையானது, இந்த வாரத்திற்குள் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இது தொடர்பான அமைச்சரவை முன்மொழிவை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், சீனாவிடம் (China) பெற்ற 307 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் கட்டப்பட்ட மத்தள விமான நிலையமானது பெரும் நட்டத்தில் இயங்கி வருகிறது.
எனவே, இதன் நிர்வாகத்தை தனியாருக்கு மாற்றுவது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த விமான நிலையமானது தற்போது ரஸ்யா மற்றும் சில மத்திய ஆசிய நாடுகளில் இருந்து சுற்றுலா விமானங்கள் வந்து செல்ல பயன்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment