யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவிலிருந்து மண்டைதீவு நோக்கி சட்ட விரோதமாக மாடுகள் கடத்துவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றி வளைப்பின் போது மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடத்திச் செல்லப்பட்ட எட்டு மாடுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment