இலங்கையில் இயங்கி வந்த பிரபல அமெரிக்க உணவகமான மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை தற்காலிகமாக விலக்கிக் கொள்ள அமெரிக்க தாய் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தை நடத்த உடன்படிக்கை செய்துள்ள பிரதிநிதி நிறுவனம் சரியான தரத்தில் உணவு மற்றும் பானங்களை வழங்கத் தவறியதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது .
தொடர்ச்சியான முறைப்பாடுகள் மற்றும் அவதானிப்பு அறிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் தமது வர்த்தக நாமத்தின் கீழ் உணவு வழங்குவதை நிறுத்துமாறு அதன் தாய் நிறுவனம் நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளது .
இலங்கையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று அமெரிக்க மெக்டொனால்ட் உணவக சங்கிலியை நாட்டில் நடத்தி வந்ததுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் அதன் 12 கிளைகளும் மூடப்பட்டுள்ளன.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கிளை ஒன்றில் அதன் பெயர் பலகையை அகற்றும் புகைப்படம் நேற்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது .
மேலும் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் தற்போது பாவனையில் இல்லை என குறிப்பிடுகிறது . இலங்கை இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கூகுள் மேப்பில் தேடும் போது, 'தற்காலிகமாக மூடப்பட்டது' என்ற வார்த்தை காண்பிக்கப்படுகிறது .
அமெரிக்காவை தளமாகக் கொண்ட நன்கு அறியப்பட்ட சமைத்த உணவுப் பொருளான McDonald's இலங்கையில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் தமது செயற்பாடுகளை தொடங்கி இருந்தார்கள்
Post a Comment