விஜய் படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகியதற்கான காரணம் இதுதானா?- வெளிவந்த தகவல்
நடிகர் அஜித்தை வைத்து தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.
முதல் படமே அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுக்க அடுத்தே விஜயகாந்தை வைத்து ரமணா திரைப்படம் இயக்கினார். இந்த படமும் முருகதாஸிற்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது.
பின் சூர்யாவை வைத்து கஜினி, 7ம் அறிவு ஆகிய படங்களை இயக்கினார், இதில் கஜின் படத்தை ஹிந்தியில் அமீர்கானை வைத்து இயக்கியதன் மூலம் அங்கேயும் வெற்றிக் கண்டார்.
விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை எடுத்து ஹிட்டாக அதே படத்தை ஹிந்தியில் அக்ஷய் குமாரை வைத்து படம் எடுத்தார்.
இந்த படங்களுக்கு பின் விஜய்யுடன் கத்தி, ரஜினியுடன் தர்பார், மகேஷ் பாபுவை வைத்து ஸ்பைடர் என அடுத்தடுத்த படங்கள் மூலம் தோல்வியை கண்டார்.
இப்படி அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த ஏ.ஆர்.முருகதாஸிற்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது.
ஆனால் தர்பார் படம் வந்த நேரம் இதனால் சன் பிக்சர்ஸ், முருகதாஸிற்கு குறைவான சம்பளத்தை பேசியுள்ளனர். அவர்கள் கூறிய சம்பளத்தை ஏற்காததால் முருகதாஸ் விஜய் படத்தில் இருந்து வெளியேறினார் என்கின்றனர்.
Post a Comment