ஜேர்மனியை சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவர் 217 முறை கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.
வைத்தியர்களால் வழங்கப்பட்ட அறிவுரைகளை மீறி குறித்த நபர் இவ்வாறாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனிப்பட்ட ரீதியில், அவருக்கு கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 29 மாதங்களில் 217 கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அதிக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட குறித்த நபருக்கு இதுவரையில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொரோனா தடுப்பூசிகள் புதிய நோயை தோற்றுவிக்காதெனவும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா
தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
Post a Comment