ஒரு காலத்தில் புதுப்படங்கள் ஏதாவது வெளிவந்தால் அதை தியேட்டர்களில் போய் பார்க்கும் படியாக இருந்தது. ஆனால் தற்போது தியேட்டர்களில் வெளியாகி கொஞ்சம் நாட்களிலேயே வீட்டிலிருந்தபடியே பார்த்து கொள்ளலாம் என்கிற மாதிரி ஓடிடி தளத்தின் மூலம் படங்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
இப்படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்ததால் 230 கோடி வரை வசூலின் லாபத்தை சம்பாதித்து விட்டது. மேலும் இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 15 கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி ஓடிடி-யில் ரிலீஸ் ஆகப்போகிறதுபிரசாந்த் வர்மா இயக்கத்தில் பொங்கலை ஒட்டி ஹனுமன் படம் தெலுங்கில் வெளிவந்தது. இதில் தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இப்படத்துடன் போட்டி போட்டு மகேஷ்பாபு நடித்த குண்டூர் காரம் படமும் வெளிவந்தது.
ஆனால் இப்படத்தை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு ஹனுமன் படம் வெற்றி பெற்றுவிட்டது. அதாவது 40 கோடி பட்ஜெட்டில் செலவு செய்து 330 கோடி வசூலை பெற்று பெருத்த லாபத்தை சம்பாதித்து விட்டது.
இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 20 கோடியை கொடுத்து வாங்கி இருக்கிறது. மேலும் ஓடிடி தளத்தில் வருகிற ஏப்ரல் 5ம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது.
லவ்வர்: பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் பிப்ரவரி 9ம் தேதி லவ்வர் திரைப்படம் வெளிவந்தது. இதில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாமல் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனாலயே ஓடிடி தளத்தில் 5 கோடிக்கு மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. இப்படத்தின் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வாங்கி இன்று முதல் ஓடிடி-இல் ரிலீஸ் ஆகப்போகிறது.
பிரேமலு: கிரீஸ் இயக்கத்தில் கடந்த மாதம் 9 ஆம் தேதி பிரேமலு மலையாள திரைப்படமாக வெளிவந்தது. இதில் நஸ்லென் கே. கஃபூர், மம்தா பைஜூ நடித்திருக்கிறார்கள். இப்படம் காதல் கதையை வைத்து எடுக்கப்பட்டு மக்கள் மனதை கொள்ளை அடித்து விட்டது.
அதனாலயே சின்ன மீனை போட்டு பெரிய திருமங்கலத்தையே தூண்டில் போட்டு இழுத்து விட்டது.
அதாவது இப்படத்தின் பட்ஜெட் 3 கோடி தான் ஆனால் கிடைத்த லாபம் 135 கோடி. இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் 15 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது. இப்படம் வருகிற மார்ச் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது.
Post a Comment