தமிழர் ஒருவர் உட்பட 10 குற்றவாளிகளின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட்டு லண்டன் பொலிஸார் பெண்கள் மற்றும் சிறுமிகளை எச்சரித்துள்ளனர்.
குறித்த 10 பேரும் செயலிகளில் காணப்பட வாய்ப்பிருப்பதாகவும், அவர்களை கட்டாயம் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த நபர்களின் முகங்களை நினைவில் வைத்திருப்பதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் எச்சரித்துள்ளனர்.
Kevarnie Queen என்பவர் 22 துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி 16 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
Ilford பகுதியை சேர்ந்த 41 வயது சமீர் பட்டேல் 8 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்களுக்கு சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
Stanwell பகுதியை சேர்ந்த 32 வாயது ரதீசன் ரங்கநாதன் பல்வேறு துஸ்பிரயோக வழக்குகளில் சிக்கி, 2022 ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
Forest Gate பகுதியை சேர்ந்த 39 வயது அஷ்ரப் கான் என்பவர் மீது இரண்டு வன்கொடுமை வழக்கு மற்றும் ஒரு துஸ்பிரயோக வழக்கு பதியப்பட்டுள்ளது.
Richmond பகுதியை சேர்ந்த 21 வயது David Berbers சமூக ஊடகத்தில் அறிமுகமான இளம் வயது சிறுமி ஒருவரை வன்கொடுமை செய்துள்ளார்.
தெற்கு க்ராய்டன் பகுதியை சேர்ந்த 47 வயது Clint Osbourne மற்றும் 29 வயதான Jamie Maggioni ஆகியோர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு லண்டன் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா
தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Post a Comment